×

பரமக்குடியிலிருந்து காரைக்குடிக்கு 1-டூ-3 பேருந்து இயக்க பயணிகள் கோரிக்கை

பரமக்குடி: பரமக்குடியிலிருந்து காரைக்குடிக்கு ஒன் டூ திரி பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியிலிருந்து காரைக்குடிக்கு குறிப்பிட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும் காரைக்குடி வழியாக சென்றுவருகிறது. இதில் அலுவலக பணிக்காகவும், கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். பரமக்குடி-மதுரைக்கும் 76 கிலோ மீட்டர் தூரத்தை 1.30 மணி நேர பயனத்தில் சென்றுவிடுகின்றனர். ஆனால் பரமக்குடியிலிருந்து காரைக்குடி வரை சுமார் 20க்கும் மேற்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்வதால் 76 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரம் பயணம் செய்யவேண்டியுள்ளது. இதனால் அலுவலக பணிகளுக்கு செல்பவர்கள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் கல்லூரிக்கு செல்பவர்கள் காலை 5 மணிக்கு பஸ்சை பிடித்தால் தான் காலை வகுப்பு செல்லவேண்டிய நிலையில் தினமும் சென்று வருகின்றனர். இதனால் பரமக்குடியிலிருந்து விரைவு பேருந்து மற்றும் ஒன் டூ திரி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பரமக்குடி அம்பேத்கர் கூறுகையில், ‘பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தேர்வு விடைதாள் திருத்த காலை 9.30க்கு அலுவலகத்தில் இருக்கவேண்டும் என்றால் அதிகாலை 5 மணிக்கே பரமக்குடியில் தயாராக இருக்கவேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் செல்வது சிரமமாக இருக்கிறது.

வருடத்திற்கு 30 நாட்கள் செல்லும் எங்களுக்கே இவ்வளவு கஷ்டம் என்றால், தினமும் காரைக்குடிக்கு பணி நிமித்தமாக செல்பவர்களின் நிலை பரிதாபமானது. மதுரைக்கு 1.30 மணி நேரத்தில் பயணம் செய்யும் போது, அதே தூரத்தில் உள்ள காரைக்குடிக்கு 3 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலைஉள்ளது. ஆகையால், போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களின் வசதிக்காக ஒன் டூ திரி மற்றும் விரைவு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கூறினார்.

Tags : Paramakudi ,Karaikudi , Request ,1-Doo-3,Bus,Paramakudi to Karaikudi
× RELATED தந்தையை இழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி..!!